வல்லிபுரத்து ஆழ்வாருக்கு சமுத்திர தீர்த்த உற்சவம்!
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது.
வசந்த மண்டப பூஜைகளின் பின்னர் கற்கோவளத்து அடியவர்கள் ஓட்டமாக வல்லிபுரத்து ஆழ்வாரையும் பரிவார மூர்திகளையும் ஆஞ்சநேயர் முன்னே செல்ல காவிச் சென்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்திலே சக்கரத்து ஆழ்வார் என்று சொல்லுகின்ற வல்லிபுரத்து ஆழவார் தீர்த்தமாடினார்.
சிறப்பு பூஜைகள்
கடந்த 14/09/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வல்லிபுரத்து ஆழ்வார் திருவிழாவின் 16 ஆம் நாளான இன்று புரட்டாதி பௌர்ணமியிலே தீர்த்த உற்சவம் இடம்பெறுவது வழமையாகும்.
இன்றைய வல்லிபுரத்து அழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்திற்கு வடமராட்சி, யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் அடியார்கள் வருகை தந்திருந்தனர்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியர்கள் திருவிழாவில் சிறப்பு பூசைகளை மேற்கொண்டனர்.
அடிப்படை வசதிகள்
இலங்கை போக்குவரத்து சபை, வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவை என்பன அடியவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கியிருந்தன.
இதேபோன்று பருத்தித்துறை பொலிஸார், இலங்கை முதலுதவி சங்கத்தினர், இந்து சமய தொண்டர் சபை, சாரணர்கள் , இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், முதலுதவி மற்றும் ஒழுங்குபடுத்தல் சேவைகளை வழங்கினர்.
மேலும் பருத்தித்துறை பிரதேச சபையினர் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
தாக சந்தி ஆலய சூழலில் மட்டுமல்ல வடமராட்சி எங்கும் அடிவர்களால் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
பல அடியார்கள் தூக்கு காவடி, பாற் காவடி, கற்பூர சட்டி போன்ற பல்வேறு நேற்றிக் கடன்களையும் நிறைவேற்றினர். நாளைய தினம் கேணித்தீர்த்தத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
