வலிவடக்கு தவிசாளரை சந்திக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட நகுலேஸ்வரம் ஜே 226 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நகர அபிவிருத்தி பணிகளுக்காக காணி சுவீகரிப்பது தொடர்பில் நில அளவை திணைக்களத்தால் கடிதம் வழங்கப்பட்ட மக்களை வலிவடக்கு தவிசாளரை சந்திக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலிவடக்கு பிரதேச சபையில் தவிசாளர் சோ.சுகிர்தனை நாளை செவ்வாய்க்கிழமை (8) காலை 10 மணிக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அளவிடப்பட்ட காணிகளில் உள்ளடக்கப்படாதவர்களின் காணிகளையும் நிலஅளவைத் திணைக்களம் உள்வாங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



