வலிகாமம் மேற்கு பிரதேச சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்
"வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் இன்றைய நாளிலிருந்து அடுத்து வரும் நாட்களில் உங்கள் வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளமையால் உங்கள் பகுதியில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்றுங்கள்" என வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
நீரோந்து பொருட்களான தகரங்கள், பேணிகள், சிரட்டைகள், பழைய டயர்கள், வெற்றுப்போத்தல்கள் மற்றும் இளநீர் கோம்பைகள் போன்ற பொருட்களை உடனடியாக அகற்றி டெங்கு நுளம்பு பெருகுவதைக் கட்டுப்படுத்துமாறு அவர்கள் கூறுகின்றனர்.
நாளை நீரேந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள விசேட வாகன ஏற்பாடுகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பாளிகள் இல்லை என்பதை
மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என வலிகாமம் மேற்கு பிரதேச
சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
