யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், மயிலிட்டி மீள்குடியேற்ற சங்கத்தினர் மற்றும், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
காணி விடுவிப்பு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வணிகத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு தான் முன்னுரிமைப்படுத்தி விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பான விவரங்களை கையளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஜனாதிபதி ஊடாக குறித்த விபரங்கள் வழங்கப்பட்டு அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
