வலி. கிழக்கு பிரதேச அபிருத்திக்குழு கூட்டம்
வலி. கிழக்கு பிரதேச அபிருத்திக்குழு கூட்டம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவ் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வீதி அபிவிருத்தி, தொல்லியல் விடயங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
முக்கிய பிரச்சினைகள்
கூட்டத்தின் போது வலி.கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சுற்றுலாத்தலமான நிலாவரை கிணறு தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமையால் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் சுட்டிக்காட்டினர்.

தொல்லியல் திணைக்களம் கடந்த காலங்களில் நிலாவரை கிணற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியதாக தவிசாளர் கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்.
இதற்குப் பதிலளித்த கூட்டத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன், கடந்த அரசாங்கங்கள் போல் அல்லாது நாம் புதிய விடயங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
ஆகையால் தொல்பொருள் திணைக்களம் என்ற பழைய விடயங்களை கைவிடுங்கள் என கூறியதை தொடர்ந்து தவிசாளருக்கும் தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.






