காதலர் தினத்தில் வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ள பூக்களின் விலை
காதலர் தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் பூக்கடைகளில் இம்முறை வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில்,மண்சரிவு,வெள்ளம் உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பூக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளது.
பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை
இதனால் கடந்த ஆண்டை விட பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதுடன், விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.
இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும், மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும்,வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.இதனால் பூக்களை வாங்குவதை பலர் தவிர்த்துள்ளனர்.
மேலும் மலையகத்தில் இருந்து புகையிரம் இயங்காது உள்ளமையால் தலைநகர் உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது.

மேலதிக தகவல் - திவா
முதலாம் இணைப்பு
காதலர் தினத்தில் ரோஜாக்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாக பூக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விற்பனை அதிகரித்த நிலையில்,பெப்ரவரி மாதம் பூ விற்பனை குறைந்துள்ளது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
இறக்குமதி செய்யப்பட்ட பூக்களுக்கு வரி
தற்போதைய பொருளாதார சிக்கல்கள் மற்றும் பூக்களின் அதிக விலை காரணமாக, முந்தைய ஆண்டுகளை விட பூ விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பூக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள், நுவரெலியா மற்றும் பதுளையில் பூ அறுவடை குறைந்ததால் இந்தியாவில் இருந்து பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் மற்றும் போக்குவரத்து மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதற்கமைய, சிவப்பு ரோஜா: ரூ. 350 , பூங்கொத்து: ரூ. 2,500 - ரூ. 3,000 மற்றும் சிறப்பு பூங்கொத்து: ரூ. 8,000 - ரூ. 12,000 என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan