கொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம்! இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு
காதலர் தினத்தன்று பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 மதுபான விருந்துகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் புறநகர் பகுதிகளான மொரட்டுவ, பொரலஸ்கமுவ மற்றும் உனவட்டு ஆகிய பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அங்கு வெளிநாட்டு மதுபானம் 49300 மில்லி லீற்றரை கலால் அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். அதன் பெறுமதி 10 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக அனுமதி ஆரம்பத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விருந்தில் கலந்து கொண்ட காதலர்களுக்கு அதிக பெறுமதியிலான மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் எவ்வித அனுமதியுமின்றி இந்த விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
சுற்றிவளைக்கப்பட்ட சந்தேகநபர்கள் உனவட்டுன, அனுராதபுரம் மற்றும் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan