வாழைச்சேனையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டு! இளைஞன் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன (Thanajeya Peramuna) தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் கடந்த சில மாதங்களாக திருடபட்டு வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயசுந்தரவின் (P.M. Jayasundera) வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விஷேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள்கள் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் மீராவோடை கொண்டயன்கேணி பிரதேசத்தை சேர்ந்த 19வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் தொடர்புடைய வேறு யாராவது இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.






