வாழைச்சேனை கமநல சேவைப்பிரிவில் 15000 இற்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இம்முறை 21 ஆயிரத்தி 72 ஏக்கர் பெரும்போக நெற்பயிற்செய்கை 7200 விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மாதம் முதல் மட்டக்களப்பில் பெய்த தொடர் அடைமழை காரணமாக ஆறு பெருக்கெடுத்தமையினால் சிறிய குளங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்ததனால், அப்பகுதியில், பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அறுவடைக்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் இப்பாதிப்பு இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri