நாடாளுமன்றில் இந்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமிக்கு ஆதரவாக ஒலித்த குரல்
இலங்கையில் மலையக பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்திய பாட்டுப் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளமை மலையக மக்களைக் கௌரவப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (10.08.2023) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
மலையகத்திலும் திறமையானவர்கள் உள்ளனர்
"தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்வில் புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமியான அசானி பங்கேற்றுள்ளார்.
1982, 1992 பற்றி மாத்திரம் தற்போது பேச முடியாது. மலையகத்தில்
திறமையானவர்கள் உள்ளனர், கல்விமான்கள் உருவாகியுள்ளனர்"என்றும் வடிவேல்
சுரேஷ் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சிப் பாத யாத்திரைக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



