பெருந்தோட்ட மக்கள் ஈழத்தை கோரவில்லை: வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என கருதுவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பொருத்தமான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நலன்களுக்காக தீர்மானம் எடுத்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலையக மக்களின் வீட்டு, காணி, கல்வி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் ஈழத்தையோ, ஆயுதங்களையோ கோரவில்லை எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
