கச்சத்தீவை சென்றடைந்த வடதாரகை கப்பல்
கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவிற்கு 'வடதாரகை 2' கப்பல் பயணிகளுடன் சென்றடைந்துள்ளது.
குறித்த கப்பல், நேற்றையதினம் (23.02.2024) பகல் 1.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்து கச்சத்தீவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த 'வடதாரகை 2' கப்பலில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இருந்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்
அதேவேளை, இன்று சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கு தந்தையர்களின் தலைமையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
