இன்று ஆரம்பமாகவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய
வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணிக்கு
நடைபெறவுள்ளது.
இதன்படி, காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சுவாமி தேர் உலா இடம்பெறவுள்ளது.
அதேவேளை, சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் நடைபெறும்.
போக்குவரத்துச் சேவைகள்
இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு நடைபெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்கு வங்கக்கடல் நோக்கி கொண்டு செல்லப்படும்.
மேலும், மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெற்று இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.
இந்நிலையில் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |