கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி கடற்றொழிலாளர்ககளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இழுவை மடி படகுகளின் அத்துமீறல்
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்கு கடந்த 26ஆம் திகதி குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் தவறாது அனைத்து அங்கத்தவர்களையும் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அண்மைக்காலமாக இந்தியன் இழுவை மடி படகுகளின் அத்துமீறல் அதிகரித்துக் காணப்படுவதால் வடமராட்சி கிழக்கில் குறித்த கறுப்புக் கொடி போராட்டத்திற்கு பலத்த ஆதரவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri