உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா? (PHOTOS)
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போரை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.
எனினும் குறித்த பேச்சுவார்த்தையானது எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையானது போலந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
என்ன தான் அமைதியை ஏற்படுத்தும் விதத்திலான பேச்சுவார்தை நடந்தாலும் கூட யுத்த களமானது உக்கிர நிலையை நோக்கியே நகர்ந்து வருகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்த குண்டை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன், அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் (Vacuum Bomb) பயன்படுத்தினார்கள், இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை உக்ரைனின் தலைநகரான கீயுவில் ரஷ்யாவின் மிக நீண்ட படை 17 மைல்கள் (27 கி.மீ.) நீளத்திற்கு முன்னேறியுள்ளதாக வெளியான தகவல் தவறு என செயற்கைக்கோள் படங்களை வெளியிடும் மக்ஸர் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிடடுள்ளது.
எனினும் ரஷ்ய படையானது கீயுவில் 40 மைல்கள் தொலைவுக்கு நீண்டுள்ளதாக மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
