இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்படும் தடுப்பூசிகள்
இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 16 லட்சம் சினோபார்ம் குப்பிகளை அன்பளிப்பாக வழங்க சீனா முடிவு செய்துள்ளது.
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் கூற்றுப்படி, இலங்கையின் தேசிய தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 16 லட்சம் சினோபார்ம் அளவுகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை இந்த மாத இறுதியில் இலங்கைக்கு ஒப்படைக்கப்படும் என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அன்பளிப்புக்கு மேலதிகமாக, ஜூலை 2 ஆம் திகதி மேலும் 20 லட்சம் குப்பி சினோபார்ம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.
இதேவேளை கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கைக்கு ஏற்கனவே 71லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.