அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ள தடுப்பூசிகள்
அமெரிக்காவில் இருந்து இன்று 26,000 குப்பி "ஃபைசர்" தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் இதனை தெரிவித்தார்.
கட்டார் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் இந்த தடுப்பூசிகள் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 2.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டதாக அவர் கூறினார்.
இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய உறைவிப்பான் நிலையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பில் உள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மத்திய களஞ்சியத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, இன்று வரை இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 52,000 ஆகும் என்று இலங்கை அரச மருந்துக் கழகத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்தார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
