யாழில் இராணுவத்தினரின் நடமாடும் கோவிட் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பம்
நாட்டில் தீவிரமடைந்துள்ள கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இராணுவ மருத்துவப் பிரிவினர் நடமாடும் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமானது யாழ். மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.








