தடுப்பூசியை திருட்டு வழியில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்க போவதில்லை! - சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கோவிட் - 19 தடுப்பூசி மருந்தை முக்கிய பிரமுகர்களுக்கு திருட்டு வழியில் வழங்க போவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி மருந்து திருட்டு வழியில் வழங்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முக்கியத்துவ பட்டியலின் அடிப்படையிலேயே கொரோனா ஊசி மருந்து வழங்கப்படுகிறது.
அரச வைத்தியசாலைகளுக்கு வெளியில் ஊசி மருந்துகள் வழங்கப்படுவதில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி மருந்து திருட்டு வழியில் வழங்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan