உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பு
உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு மிகவும் தேவையான எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளில் 264,000 குப்பிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தமது அதிகாரபூர்வ கடிதத்தில் இலங்கையின் சுகாதார அமைச்சகத்திற்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு அந்த மருந்துகள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 6 இலட்சம் பேர் முதல் அளவை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டாம் அளவை செலுத்த வேண்டியுள்ளது.
இதன்படி இலங்கைக்குக் கிடைக்கவுள்ள 264,000 குப்பிகளுக்கு மேலதிகமாக 336,000 குப்பிகள் தேவைப்படுகின்றன.
ஏற்கனவே 1 மில்லியன் குப்பி ஃபைசர் தடுப்பூசிகளை இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
அத்துடன் அதனை எஸ்ட்ரா செனேகாவுக்கு பதிலாகப் பயன்படுத்தக்கூடிய ஏதுநிலை குறித்து ஆராயப்படுகிறது.
இந்த கலவையைப் பரிந்துரைக்கும் சில
முடிவுகள் இருப்பதாக உலக சுகாதார மையம் சமீபத்தில் கூறிய பின்னர், எஸ்ட்ரா
செனெகா தடுப்பூசிகளை இரண்டாவது அளவாகப் பெற வேண்டிய வேண்டியவர்களுக்கு இது
பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan