மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
மன்னார் நகரசபை மற்றும் பிரதேசசபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆடைத்தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதன்போது உரிய திணைக்கள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று பார்வையிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நாளை காலை 8 மணி முதல் 2ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.











ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam
