புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊடாக அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் கடந்த மாதம் 17ஆம் திகதி இனம்காணப்பட்டுள்ள நிலையில், ஆடைத்தொழிற்சாலை சில நாட்கள் மூடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1500 வரையான இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த தடுப்பூசிகள்
படையினரின் மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து தடுப்பூசி ஏற்றப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
