விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளை மறுதினம் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தலசீமியா உள்ளிட்ட ஏனைய நோய்களுக்குள்ளான சிறுவர்களுக்கு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஏனைய வைத்தியசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் குறிப்பிட்டார்.
12 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கே பைசர் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
