வடமாகாணத்தில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும் - யாழ்ப்பாணத்துக்கு 5,820 டோஸ்
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 டோஸ்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 டோஸ்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 டோஸ்களும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்களும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 டோஸ்களும் கோரப்பட்டன. அதன் முழுமையான தொகை டோஸ்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் கோரப்பட்டன.
எனினும் அது தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்2.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
