கிளிநொச்சியில் நாற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நாற்பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சைப்பெற்று வரும் சிறுவர்களுக்கு நாளை முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் நிமால் அருமைநாதன் (Nimal Arumainathan) தெரிவித்துள்ளார்.
குறித்த பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக இன்று (30.09.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை,உளநல சிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும்,மாவட்டத்தில் குறித்த நாற்பட்ட நோயையுடைய பதிவு செய்யாத சிறுவர்கள் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும்.பதிவு செய்து கொள்பவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் குறித்த சந்தர்ப்பத்தை தவறவிடாது பிள்ளைகளை அழைத்து வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
