வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசீலனை
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் இன்றையதினம் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில் , வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர், நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து நெடுங்கேணி நகரில் மக்களின் தடுப்பூசி செலுத்திய அட்டைகளைப் பரிசோதனை செய்துள்ளனர்.
குறித்த தரப்பினரின் பரிசோதனை நடவடிக்கையில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கோவிட்- 19 நோய்க்கான ஆபத்தைக் கூடுதலாகக் கொண்டிருப்பவர்கள் என அடையாளப்படுத்தி (high risk for Covid 19 disease) அவர்களுக்கும்,
நெடுங்கேணி நகர வர்த்தக நிலைய ஊழியர்களிற்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam