கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயது பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 20வயது தொடக்கம் 30வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 20-30 வயத்துப்பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 20 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாளை
21ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்,
உருத்திரபுரம்
பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா
வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும்
பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
