இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்
இலங்கை கிரிக்கெட் அணி, ஆண்கள் தேசிய அணிக்கான துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சு என்பவற்றுக்கான பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோருகிறது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் நிரூபிக்கப்பட்ட பயிற்சி பதிவு, முதல் தர அனுபவம் மற்றும் கிரிக்கெட் தொழில்நுட்பத்தில் வலுவான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில்
இலங்கை ஆண்கள் அணி தற்போது முழுமையாக உள்ளூர் பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் பயிற்சியாளர்கள் நியாயமான முறையில் சிறப்பாகச் செயல்பட்டனர், இதன் காரணமாக இலங்கையின் ஆண்கள் கிரிக்கட் அணியினர் சொந்த மண்ணில் ஆறுக்கும் மேற்பட்ட ஒருநாள் தொடர்களில் தோல்வியடையாமல் இருந்தனர்.
அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான வெற்றிகளையும்; பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




