ஊழியர் பற்றாக்குறையால் தபால் சேவைகள் பாதிக்கப்படலாம்:ஊழியர் சங்கத்தின் எச்சரிக்கை
தபால் துறையில் நிலவும் பாரிய ஊழியர் பற்றாக்குறை தபால் சேவைகளை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு தரமான சேவையை வழங்க முடியவில்லை என்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
தபால் துறையில் 7000 த்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்களில் தபால் விநியோகத்தர்களுக்காக சுமார ஆயிரத்து ஐநூறு (1500) வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
காணப்படும் பாரிய வெற்றிடங்கள்
இதனால் சில பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்றும் தொழிற்சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார கூறுகிறார்.
தற்போதுள்ள வெற்றிடங்கள் காரணமாக,தபால் ஊழியர்கள் ஒரே நாளில் பல வலயங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கடிதங்களை வழங்க வேண்டியுள்ளது.
இதனால்தான் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார். மேலும், தபால் நிலைய அதிபர் சேவையில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வெற்றிடங்கள் உள்ளன.

மேலும் கடிதம் தேர்ந்தெடுப்பவர்கள் உட்பட கனிஷ்ட ஊழியர்களில் பல வெற்றிடங்கள் இருப்பதாக அழைப்பாளர் கூறினார்.
தபால் சேவையில் இருபத்தி ஆறாயிரம் (26,000) ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்றாலும், தற்போது பத்தொன்பதாயிரம் (19,000) ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் என்றும் அவர் கூறினார்.