அவதூறு முறைப்பாடுகள் ஏற்படுத்தும் பாதிப்பு:மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
அவதூறு தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மற்றும் கணினி குற்றப் விசாரணை பிரிவுகளில் முறைப்பாடுகளை செய்வதை தடுக்குமாறு கூறுகிறது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடக தளங்களில் வெளியிடப்படும் அவதூறு பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் அமைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவுகளில் செய்யப்படும் அதிகளவான முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆணைக்குழு, "அவதூறு அறிக்கைகள்" ஒரு குற்றவியல் குற்றமாகக் கருதப்படாததால் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என ஆணைக்குழு கூறுகிறது.

அதன்படி, பொய்யான அறிக்கைகள் அல்லது அவதூறு பேச்சுக்கள் குற்றவியல் குற்றம் அல்ல என்பதை நினைவுப்படுத்துவதோடு,பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்துகிறது.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் "உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்" அவதூறான அறிக்கைகள் மீது விசாரணைகளை நடத்துவதன் மூலம் கருத்துச் சுதந்திரம் மற்றும் இணையப் பாதுகாப்பை பாதிக்கும் தன்மை கவனிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.