சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரிய பணியாளர் வெற்றிடங்கள்
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில்(Attorney general department) பெருமளவான பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்நிலை, இடைநிலை மற்றும் கடைநிலை என்ற பகுதிக்குள்ளான வெற்றிடங்கள் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறையால் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட ஒரு சவாலாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் 2023 செயல்திறன் அறிக்கையில், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பட்டியல் 1,295 ஆகும்.
எனினும் அந்த பதவிகளில் 671 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால் 624 வெற்றிடங்கள் உள்ளன.
இது திணைக்களத்தின் பணியாளர்களில் 48வீதமாகும் இந்தநிலையில், குறித்த பணியாளர் வெற்றிடங்கள், திணைக்களத்தின் செயல்திறனை நேரடியாகப் பாதித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பணியாளர் வெற்றிடங்கள்
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொருத்தமான வேட்பாளர்களை ஈர்ப்பதிலும், ஏற்கனவே அங்குள்ள திறமையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரசு சட்டத்தரணிகளுக்கு நிரந்தர குடியிருப்புகளை நிறுவுவதற்கான அவசரத் தேவை இதில் முக்கியமானதாகும்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு சேவை செய்வதற்கு கொழும்புக்கு வெளியே போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும் கணக்காய்வாளர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
