மதுவுக்குள் சிக்குண்டவர்கள் மலையக மக்கள் அல்ல: இராதாகிருஷ்ணன் சூளுரை
தேர்தல் காலத்தில் மலையக மக்களை ஒரு போதும் கூடுதலான வாக்குகளை பெற்றுக்கொள்ள தவறான வார்த்தைகளை கூறி புறக்கணிக்காதீர்கள் எனநுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்றைய தினம் (23) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த (22) வியாழக்கிழமை இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மலையக மக்கள் தேர்தல் காலங்களில் மது அருந்திவிட்டு அல்லது மதுபானத்திற்காகவே தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை காணக்கூடியதாக இருந்தது.
அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மலையக மக்கள் ஒருபோதும் காசுக்காகவும் மதுபானத்திற்காகவும் தான் தேர்தல் வாக்களிக்கிறார்கள் என்று கூறுவது ஒரு மோசமான செயலாகும்.
நாங்களும் இந்த சமூகத்தில் வாழ்கின்ற இரண்டாம் தர பிரஜை அல்ல நாங்களும் முதல் தர பிரஜைகளாகவே காணப்படுகிறோம்.
எங்கள் மக்கள் இன்றைய சூழ்நிலையில் படித்த ஒரு கௌரவமான நிலையிலே அனைவரும் வாழ்கின்றனர்.
ஆகவே இவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதும். மலையக மக்கள் மாத்திரம் கூலி வேலைக்கு உகந்தவர் என்று கருதுவது எண்ணங்களில் எம்மை பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாங்களும் இந்த சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் என்பதை யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே எல்லோரும் மது அருந்துகின்றனர் எம் மக்கள் மாத்திரமா அருந்துகின்றார்கள் என்று கூறுவது தேர்தல் காலங்களில் சொல்கின்ற ஒரு பிழையான பொய் கூற்றாகவே கூற்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.
அந்தக் கருத்தைத் தெரிவித்தவர்களுக்கு எமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி வரும் காலங்களில் மலையக மக்களை பொது இடங்களிலோ அல்லது ஊடகங்களிலோ தவறாக பேசாதீர்கள்” என அவர் கூறியுள்ளார்.