வாகன சந்தையில் வீழ்ச்சி!
சர்வதேச ரீதியில் மின்சார வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில், கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மின்சார கார்களின் விலை சுமார் 32 வீதம் சரிந்துள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் பெட்ரோல் கார்களின் விலை வெறும் 7 வீதம் மட்டுமே சரிந்துள்ளது.
விலை வீழ்ச்சி
இதனையடுத்து, மின்சார கார்களின் விலை வீழ்ச்சி குறித்து சந்தை ஆய்வாளர்கள் விவாதித்து வருகின்றனர்.

அத்தோடு, வரி விதிப்பு காரணமாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும் புதிய கார்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதால் உற்பத்தியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் நீண்ட கால விற்பனை மற்றும் மதிப்பீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam