சுற்றுலா வலயங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு!
இலங்கையின் முக்கிய சுற்றுலா வலயங்களில் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலா மண்டலங்களை எதிர்கால 'பூச்சிய உமிழ்வு' மண்டலங்களாக மாற்றும் நோக்குடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் அரசாங்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
அத்தகைய மாற்றத்திற்கு ஆதரவளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சி
சுற்றுலா மையங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்த முயற்சி முதலீடுகள் மற்றும் நடைமுறைத் திட்டங்களின் கலவையாக செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை, நிலையான வளர்ச்சிக்கான பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும், இலங்கையின் பசுமைச் சுற்றுலாத் துறைக்கு புதிய புத்துணர்வை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.
உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்! இனியும் தவிர்க்காதீங்க Manithan
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri