இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்களில் பைடன் நிர்வாகம் அழுத்தங்களை கொடுக்கும்!
இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்களில் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் உண்மையான அமைதி நிலவுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா மற்ற நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போது கூறமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த அரசாங்க காலத்திலும் சரி, தற்போதைய அரசாங்கத்திலும் சரி மனித உரிமைகள் முன்னேற்ற விடயங்கள் மிகவும் மந்த கதியிலேயே காணப்படுகின்றது” என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மனித உரிமைகளுக்கான ஆதரவை இலங்கையை கொடுமைப்படுத்தும் முயற்சியாக பார்க்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam