பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையையும் இரகசியமாக உள்ளடக்கிய அமெரிக்கா
இந்து - பசுபிக் அமெரிக்க பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் அமெரிக்க அரசாங்கம், இலங்கையையும் இரகசியமான முறையில் உள்ளடக்கியுள்ளதாக வெள்ளை மாளிகையின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணம் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்டு இணக்கம் வெளியிட்டுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் அனுமதி வழங்கவில்லை.
இலங்கை இந்த வேலைத்திட்டத்தில் இணையாது நடு நிலையாக இருந்து செயற்படுவதாக அறிவித்திருந்தது.
இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆவணம் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.