தங்கமீன் வளர்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி
பெண்ணொருவர் வளர்த்த தங்கமீனுக்கு வாடகை வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தனக்கு மட்டுமின்றி தான் வளர்த்த தங்கமீனுக்கும் சேர்த்து வீட்டு உரிமையாளர் வாடகை வசூலித்ததாக பெண்ணொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மீன் வளர்ப்பிற்கு வாடகை
அமெரிக்காவை சேர்ந்த நிக் (Nic) என்ற பெண் தனது டிக் டாக் பதிவில் இதைப் பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்த பெண் கூடுதல் கட்டணங்கள் குறித்த வருத்தத்தை வெளிப்படுத்தும் போது தனது மாத வாடகை அறிக்கையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
வாடகையின் மதிப்பு
தன்னுடன் வீட்டில் ஒரே ஒரு தங்கமீனை வளர்ப்பதற்காக, வீட்டு உரிமையாளர் தனக்கு $200 (இலங்கை பணமதிப்பில் ரூ.73,600) மற்றும் $15 (இலங்கை பணமதிப்பில் ரூ.5525) மாதாந்திர 'செல்லப்பிராணி வாடகையாக' வசூலிப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
@nicr__ They’re now charging pet rent for fishes? #speachless #landlords #petrent #goldfish #greenscreen #capitalism ♬ original sound - Nic
குறித்த பெண்ணின் டிக் டாக் பதிவு தொடர்பில் பல பார்வையாளர்கள் நில உரிமையாளரை பேராசை கொண்டவர் என்று திட்டியுள்ளனர்.
இதேவேளை சிலர் மீன் தொட்டி உடைந்து சேதம் ஏற்படும் அபாயம் எப்போதும் இருப்பதால், வீட்டு உரிமையாளர் இவ்வளவு பெரிய கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்து தமது கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
