ரஷ்யா பற்றி அமெரிக்கா கடும் எச்சரிக்கை
உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்யா படைகளை வெளியேற்றுவதை பார்த்து யாரும் ஏமாந்துவிட கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் புதிய திருப்பமாக நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் முதல் கட்ட உடன்படிக்கைகள் சில எட்டப்பட்டன. அதன்படி உக்ரைன் நாடு தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தது.
இதன் அர்த்தம் உக்ரைன் எக்காரணம் கொண்டும் நேட்டோவில் இணையாது. மாறாக சில நாடுகளின் கூட்டமைப்பு இணைத்து உக்ரைனை பாதுகாக்கும்.
உக்ரைனின் இந்த பரிந்துரையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. இதையடுத்து கீவில் இருந்து படைகளை வெளியேற்றுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேபோல் செர்ணிஹிவ் பகுதியில் இருந்தும் படைகளை வெளியேற்றுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காலையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன.
ரஷ்ய டாங்கிகள் கீவில் இருந்து ரஷ்யாவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னும் போர் முழுமையாக முடியவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை நம்ப கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த செயல் மக்களை ஏமாற்றும் வகையில் இருக்கலாம். உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருக்கலாம். கீவை ரஷ்யாவால் பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்யா படைகளை வெளியேற்றுவது நம்பி ஏமாந்துவிட கூடாது.
அவர்களின் தந்திரம் இது. இதை பார்த்து யாரும் ஏமாற கூடாது. அவர்கள் தங்கள் படைகளை வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். உக்ரைனின் மற்ற இடங்களில் ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தலாம்.
ரஷ்யா மற்ற இடங்களில் மோசமாக தாக்கும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் கீவிற்கான ஆபத்து ஓவர் என்றும் கூறி விட முடியாது. ரஷ்யாவால் கீவை பிடிக்க முடியவில்லை.
இதனால் மற்ற நகரங்களை பிடிக்க ரஷ்யா நினைக்கும். ரஷ்யாவின் இந்த செயலை பார்த்து ஏமாந்துவிட கூடாது. ரஷ்யா ஏற்கனவே மற்ற நகரங்களில் தாக்குதல் நடத்தி வருவதை மறந்து விட வேண்டாம், என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
