இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும்! - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த நாடுகளை அதிக ஆபத்தான நிலை 4இல் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகையினால் இந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
நெதர்லாந்து, மால்டா, கினியா-பிசாவ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளை "நிலை 4 இல் இருநது "நிலை 3க்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை அந்த இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா "Leve1 1: Low" இலிருந்து "Level 2: ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குவிலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பெனின், கானா, கிரெனடா, துருக்கி மற்றும் கைகோஸ் தீவுகளுக்கான ஆலோசனை நிலைகள் "நிலை 3." க்கு உயர்த்தப்பட்டுள்ளது.