உக்ரைனின் தானிய கிடங்குகளை தகர்த்த ரஷ்யா: அமெரிக்கா கடும் கண்டனம் - உலக செய்திகள்
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென்று ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனின் தானிய கிடங்குகள் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
இதற்கமைய புதன்கிழமை அவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அத்துடன் உக்ரேனிய தானிய ஏற்றுமதியை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடனடியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இணைய ரஷ்யா முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஜூலை 17ம் திகதி உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், தொடர்ந்து தானிய கிடங்குகள் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு