இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள்

Sri Lanka United States of America IMF Sri Lanka
By Rakesh Dec 09, 2024 09:39 AM GMT
Report

இலங்கை அரசிடம் போதிய நிதி இல்லாததன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டி, நிதி உதவிகளை வழங்குமாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்திருக்கும் அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள், அதற்கான சாத்தியப்பாடுகள் பெருமளவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, புதிய அரசு பேணிவரும் சமநிலையான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் திருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் அப் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குரிய அழுத்தங்களைச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் : அநுர அரசுக்கு ரணில் பதில்

மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் : அநுர அரசுக்கு ரணில் பதில்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் டொனால்ட் லூ தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

பொருளாதார நிலவரம்

இந்தச் சந்திப்பின்போது நாட்டின் சமகால மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்தும், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் நகர்வுகள் குறித்தும் பரந்துபட்ட அடிப்படையில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் | Us Urges Pressure On Terror Law Promises

அதன்படி தற்போது தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்தும், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்டமூலம் குறித்தும் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தமது தீவிர கரிசனையை வெளிப்படுத்திய சிவில் சமூக பிரதிநிதிகள், அவற்றின் தாக்கங்கள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளித்தனர்.

அதனைச் செவிமடுத்த அமெரிக்கப் பிரதிநிதிகள், இச்சட்டங்களை முற்றாக நீக்குவது குறித்து அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை சிவில் சமூக பிரதிநிதிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தமிழ் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் அநுர!

தமிழ் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் அநுர!

ஜனநாயக ஆட்சி 

அதுமாத்திரமன்றி ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இவ்விடயங்கள் தொடர்பில் சகலரையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் | Us Urges Pressure On Terror Law Promises

அதேவேளை புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் திருப்திகரமான சமிக்ஞையை வெளிப்படுத்திய அமெரிக்கப் பிரதிநிதிகள், அரசு ஏனைய நாடுகளுடன் சமநிலைத்தன்மை வாய்ந்த வெளிவிவகாரக் கொள்கையைப் பேணி வருவதாகத் தெரிவித்தனர்.

அதேபோன்று பொருளாதாரக் கொள்கை என்று வருமிடத்து, சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக அரசு செயலாற்றி வருவது குறித்து வரவேற்பு வெளியிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள், சமகால பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.

அமெரிக்க உயர்மட்டக் குழுவினர்

இதன்போது இலங்கை அரசிடம் போதுமான நிதி இல்லை எனவும், அது மிக முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும் அமெரிக்க உயர்மட்டக் குழுவினரிடம் சுட்டிக்காட்டிய சிவில் சமூக பிரதிநிதிகள், எனவே, இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கமுடியாதா? எனக் கேள்வி எழுப்பினர்.

இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் | Us Urges Pressure On Terror Law Promises

இருப்பினும் அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என அவர்கள் பதிலளித்தனர். அதனையடுத்து எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இலங்கையை உள்வாங்குவதற்கான வாய்ப்பு உண்டா? எனச் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டமையினால் அதுவும் சாத்தியமில்லை என அமெரிக்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இருப்பினும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலைப் பிரதிபலிக்கக்கூடியவாறு சகலரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எனவும் அவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளிடம் உறுதியளித்தனர்.

வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் - இளம் தம்பதி தப்பியோட்டம்

வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் - இளம் தம்பதி தப்பியோட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US