ரஷ்யாவிற்கு எதிராக ரகசியமாக காய்நகர்த்தும் அமெரிக்கா!
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன், உக்ரைனுக்கு ரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்கா உங்கள் பின்னால் இருக்கிறது
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை திடீரென சந்தித்த அவர், “இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அமெரிக்கா உங்கள் பின்னால் இருக்கிறது. எவ்வளவு காலம் எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் நிற்போம்.
அத்துடன் ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் கூடுதல் நிதி உதவி உக்ரைனுக்கு இருக்கும்.”என அவர் உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கீவ்வின் செயின்ட் மைக்கேல் சதுக்கத்தில் ஜேனட் யெல்லென், போரின்போது இறந்த உக்ரேனியர்களின் நினைவுச் சுவரில் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.
வருகைக்கான காரணம்
இதேவேளை உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதற்காகவே அவரது வருகை இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு 1.25 பில்லியன் டொலர்களை வழங்குவதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
மேலும் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனுக்கு 13 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார மற்றும் பட்ஜெட் ஆதரவு நிதியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
