ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் குறித்த கலந்துரையாடல் சற்று முன்னர் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கட்டண விவகாரம்
அமெரிக்காவில் புதிய இறக்குமதி வரிக் கொள்கைகளை மாற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இங்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கட்டண விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam