நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்
தேர்தல் வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதன்படி இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான இரண்டு குற்றவியல் முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள்
அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 13 வேட்பாளர்களும் 43 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri

குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam
