உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளை ஈடுசெய்ய அமெரிக்காவின் புதிய திட்டம்!
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போருக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு மற்றும் செலவுகளை ஈடுசெய்யும் முயற்சியாக, உக்ரைனுடன் ஒரு அரிய கனிம ஒப்பந்தத்தை எட்ட புதிட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உக்ரைன் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தாலும், பல திருத்தங்களுக்குப் பிறகு, உக்ரைன் அதற்கு உடன்பட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் முன்வைத்த கோரிக்கை
உக்ரைன் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் விளைவாக குறித்த நடவடிக்கை எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா ஏற்கவில்லை.
மேலும் அறிக்கைகளின்படி, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா செல்வார் என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
