இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பினை வழங்கும் அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகள்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது.
இந்த சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளதுடன்இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்புகள் உள்ள நிலையில் போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
