அமெரிக்கா அண்மையில் விதித்த 20% வரி! மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள முக்கிய ஏற்றுமதி பிரிவுகள்
இலங்கை பொருட்கள் மீது அமெரிக்கா அண்மையில் விதித்த 20% வரி காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றிய முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று( 6) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், வரி உயர்வின் நேரடி தாக்கம், இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி பொருட்கள் மீது ஏற்படும் நட்டம் மற்றும் உயரும் உற்பத்தி செலவுகள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இலங்கை நிறுவனங்கள்
குறிப்பாக, ஆடைத் துறை, தேயிலை, ஏனைய விவசாய மற்றும் கடலுணவு பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்காவுக்கான முக்கிய ஏற்றுமதி பிரிவுகள் இந்த வரியால் மோசமான பாதிப்பை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டது.
அமெரிக்க சந்தையில் போட்டியிடும் இலங்கை நிறுவனங்களுக்கு கிடைக்கும் வர்த்தக நன்மைகள் குறையக்கூடும் என்பதால், நிலைமையை சமாளிக்க புதிய சந்தைகள் தேடல், வர்த்தக உடன்பாடுகள் மீளாய்வு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல் போன்ற தீர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, “இந்த வரிச் சவாலை எதிர்கொள்ள ஏற்றுமதித் துறையின் ஒருமித்த அணுகுமுறையும், அரச மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம்” என வலியுறுத்தினார்.




