சீனாவின் கடுமையான எச்சரிக்கையை மீறி தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்
ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானில் சற்று நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசி பயணம் மேற்கொண்டுள்ளார்.
மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் முதல் பயணம்
இது, பல தசாப்தங்களுக்கு பின்னர் தாய்வானுக்கு மேற்கொள்ளப்படும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் முதல் பயணமாக கருதப்படுகின்றது.
சீனா, தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக பார்க்கின்றது. அது சீனாவுடன் சேர வேண்டிய பகுதி என்றும் சீனா கூறி வருகின்றது.

இந்நிலையில்,பெலோசியின் தாய்வான் பயணம், ஆத்திரமூட்டி, ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவும்,சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.
இதற்கிடையில்,சீனாவின் எஸ்யு-35 போர் விமானங்கள் தாய்வானை நோக்கி செல்வதாக அந்த நாட்டு அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam