ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தமது துருப்புக்களை அனுப்பியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் இன்று பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ''டெர்மினல் ஹை-ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் Terminal High-Altitude Area Defense (THA) படைப்பிரிவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
THA படை
பேட்ரிக் ரைடரின் கூற்றுப்படி, THA படைப்பிரிவில் சுமார் 100 அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றன.
அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்தப்படுவது அரிது என்றாலும், ஏவுகணைகளை எதிர்க்கும் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான வழக்கமான எண்ணிக்கையிலான துருப்புக்களே அனுப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் ஒக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேலின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியிருந்தது.
இதில் அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஈரானிய அணுசக்தி தளங்கள்
மேலும் ஈரானிய அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் உற்பத்தி பகுதிகளை இஸ்ரேல் குறிவைப்பதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதன்படி ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.
பிராந்தியம் முழுவதும் தனது வான் பாதுகாப்பை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலுக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமான தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் சைப்ரஸுக்கும் கூடுதல் துருப்புக்களை அனுப்பியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
