நெருங்கியது ட்ரம்ப் அறிவித்த அந்த நேரம்! வளைகுடாவில் தீவிரமடையும் பதற்றநிலை
புதிய இணைப்பு
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தற்போது ஆரம்பமாவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி, தற்போது நேரம் காலை10:00 மணி, இது ட்ரம்ப் அறிவித்திருந்த முற்றுகை ஆரம்பமாகும் நேரமாகும்.
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடங்குவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு இதுவாகும்.
முதலாம் இணைப்பு
இன்னும் சில மணிநேரங்களில் ஈரானிய கப்பல்கள் மீது முழுமையான முற்றுகையை அமெரிக்க கடற்படை நடைமுறைபடுத்தும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பிற நாடுகளுக்கு அனுமதி..
அமெரிக்க மத்திய புலனாய்வு வெளியிட்டுள்ள தகவலின் படி, அமெரிக்க நேரப்படி, ஏப்ரல் 13ஆம் திகதி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை ஆரம்பமாகவுள்ளது. (தற்போது அமெரிக்காவில் நேரம் - காலை 06:55)

மத்திய புலனாய்வின் அறிவிப்பில், ஈரானிய துறைமுகங்களுக்கு முழுமையான கடற்படை முற்றுகையை அமெரிக்கப் படைகள் நடைமுறைபடுத்த தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஈரானுக்குச் செல்லும் அல்லது ஈரானிலிருந்து வரும் கப்பல்களைத் தவிர மற்ற சர்வதேச கப்பல்கள் ஹோர்முஸ் நீரிரணை வழியாகத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் மத்திய புலனாய்வு தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO